This translation may not reflect the changes made since 2015-12-19 in the English original.

Please see the Translations README for information on maintaining translations of this article.

நீங்கள் ஏன் நிறைவற்ற ஜிபிஎல்ஐ உங்களது அடுத்த நிரலகத்துக்கு பயன்படுத்த கூடாது

குனு திட்டப்பணி நிரலகங்களுக்கு பயன்படுத்த இரண்டு உரிமங்களை கொண்டுள்ளது. ஒன்று குனுவின் நிறைவற்ற ஜிபிஎல், மற்றொன்று குனுவின் சாதாரண ஜிபிஎல். எந்த உரிமத்தினை தேர்ந்தெடிக்கிறோம் என்பது நிறைய வித்தியாசங்களை தருகிறது. நிறைவற்ற ஜிபிஎல் பயன்படுத்துவதன் மூலம் நிரலகத்தினை கட்டுள்ள மென்பொருட்களில் பயன்படுத்த முடியும். ஆனால் சாதாரண ஜிபிஎல் பயன்படுத்துவதன் மூலம் கட்டற்ற மென்பொருட்களில் மட்டுமே பயன் படுத்த முடியும்.

எந்த ஒரு நிரலகத்துக்கும் ஏற்ற உரிமம் எது என தீர்மானிப்பது ஒரு வியுகம் , அது சந்தர்ப்ப சூழ்நிலைகளை பொறுத்து அமையும்.தற்சமயம் அதிகமான நிரலகங்கள் நிறைவற்ற ஜிபிஎல்ன் பாதுகாப்புக்குள் தான் வருகின்றன. இதன் அர்த்தமானது நாம் இரண்டு வியுகத்தினுள் ஒன்றை மற்றும் உபயோகித்து மற்றதை புறக்கணிப்பதை போன்றது. ஆகவே நாங்கள் இப்போது சாதாரண ஜிபிஎல்ன் கீழ் அதிகமான நிரலகங்கள் வெளிவரவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

கட்டுள்ள மென்பொருள் உற்பத்தியாளர்களிடம் பணம் எனும் மேம்பாடு உண்டு. கட்டற்ற மென்பொருள் உற்பத்தியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் தான் மேம்பாட்டினை அளிக்க வேண்டும். சாதாரண ஜிபிஎல்ஐ ஒரு நிரலகத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் கட்டற்ற மென்பொருள் உற்பத்தியாளர்களுக்கு, தாங்கள் பயன்படுத்த முடிந்த ஆனால் கட்டுள்ள மென்பொருள் உற்பத்தியாளர்கள் பயன்படுத்த முடியாத நிரலகம் எனும் மேம்பாடு கிடைக்கின்றது.

சாதாரண ஜிபிஎல் பயன்படுத்துவது எல்லா நிரலகத்துக்கும் நன்மை தராது. சில காரணங்களினால் நிறைவற்ற ஜிபிஎல் பயன்படுத்துவது சில சூழ்நிலைகளில் சரியாக இருக்கும். ஒரு கட்டற்ற நிரலகத்தின் கூறுகள் வேறு சில கட்டுள்ள நிரலகதின் மூலமாக கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கும் சந்தர்பங்களில் சாதாரண ஜிபிஎல் பயன்படுத்துவது எந்த விதமான நன்மைகளும் பயக்காது. இம்மாதிரி சந்தர்ப்பங்களில் நிறைவற்ற ஜிபிஎல் பயன்படுத்துவதே அந்த நிரலகத்திற்க்கு சிறந்தது.

இதன் காரணமாகவே நாங்கள் குனு சி நிரலகத்திற்க்கு நிறைவற்ற ஜிபிஎல் பயன்படுத்தினோம். ஏற்கனவே நிறைய சி நிரலகங்கள் உள்ளன, நமது நிரலகத்திற்க்கு ஜிபிஎல் உபயோகித்தால், கட்டுள்ள மென்பொருள் உற்பத்தியாளர்கள் வேறு நிரலகத்தினை உபயோகிக்கும்படி செய்திருப்போம், இது நமக்கு பிரச்சினையே தவிர அவர்களுக்கு அல்ல.

ஆனால் குனு ரீட்லைன் போன்ற ஒரு நிரலகம் தனித்தன்மையுள்ள கூறினை அளிக்கும் போது, அது வேறு ஆகிறது. ரீட்லைன் நிரலகம் உள்ளீட்டினை திருத்தியமைத்தல் மற்றும் வரலாறு பதிப்பித்தல் ஆகியவற்றை உடாடும் நிரல்களிடத்தில் செய்கிறது. இப்படி பட்ட செயல்திறன் வேறு எங்கும் காண்பது அரிது. இந்த நிரலகத்தினை சாதாரண ஜிபிஎல் மூலம் வெளியிட்டு அதன் பயன்பாட்டினை கட்டற்ற மென்பொருட்களுக்கு மட்டும் என வரையறுப்பது நமது சமூகத்திற்கு ஒரு ஊட்டம் தரும். குறைந்தபட்சம் ஒரு நிரலேனும் ரீட்லைன் பயன்படுத்த வேண்டி இருந்ததால் கட்டற்றதாக உள்ளது.

நாம் ஜிபிஎல் சார்ந்த வலுவான மாற்று இல்லாத நிரலகங்களை திரட்டினால், அவை புதிதாக உருவாக்கப்படும் கட்டற்ற மென்பொருட்களில் நிரல் கூறுகளாக செயல்படும். இது கட்டற்ற மென்பொருள் உற்பத்திக்கு அனுகூலமாகவும், மென்பொருட்கள் இந்த நிரலகங்களை பயன்படுத்துவதன் மூலம் கட்டற்றவையாக வெளியிடப்படுவதற்கு தூண்டுகோலாகவும் அமையும். பல்கலைகழக மென்பொருட்களில் தாக்கத்தை ஏற்படுத்துவது எளிது. இந்நாட்களில் மென்பொருள் நிறுவனங்களும், மென்பொருட்களை கட்டற்றவையாக வெளியிடுவது பற்றி யோசிக்கும் தருவாயில், வர்த்தகரீதியான மென்பொருட்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

கட்டற்ற மென்பொருட்களுக்கு இருக்கும் ஆதாயத்தினை மறுக்க நினைக்கும், கட்டுள்ள மென்பொருள் உற்பத்தியாளர்கள், மென்பொருள் உற்பத்தியாளர்களை நிரலுக்கு ஜிபிஎல் உரிமம் கோர வேண்டாம் என சமாதனப்படுத்த முயலுவார்கள். உதாரணத்துக்கு, நிரலகத்தினை கட்டுள்ள மென்பொருட்களில் உபயோகிப்பதன் மூலம் “அதிகமான பயன்பாட்டாளர்களை உருவாக்கி தருவதாக“ கூறலாம். புகழ் என்பது எப்போதுமே கவர்ச்சியானது. ஆகவே ஒரு நிரலாக உற்பத்தியாளரின் பகுத்தறிவை மங்க செய்து, ஒரே ஒரு நிரலகத்தின் புகழே சிறந்தது என எண்ண வைக்கும்.

ஆனால் நாம் இதுபோன்ற கவர்ச்சிகளுக்கு மயங்க கூடாது, ஏனெனில் நாம் ஒன்றாக செயல்படும் போது இன்னும் அதிகமாக சாதிக்கலாம். கட்டற்ற மென்பொருள் உற்பத்தியாளர்களான நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி புரிய வேண்டும். நிரலகங்களை கட்டற்றவையாக வெளியிடுவதன் மூலம் கட்டற்ற மென்பொருட்கள் அவற்றுக்கு இணையான கட்டுள்ள மென்பொருட்களை விட மேம்பட்டு செயல்படுவதற்கு உதவ முடியும். இதனால் மொத்த கட்டற்ற மென்பொருள் சமுதாயமும் மேன்மை பெரும்.