This translation may not reflect the changes made since 2013-02-23 in the English original.

Please see the Translations README for information on maintaining translations of this article.

கட்டற்ற மென்பொருள் அமைப்பு ஏன் பங்களிப்போரிடமிருந்து காப்புரிமையை அளிக்கக் கேட்கிறது

-- பேராசிரியர் ஈபன் மோக்லன், கொலம்பியா பல்கலைக்கழக சட்டக் கல்லூரி

வரலாற்று நோக்கில், பெரும்பாலான கட்டற்ற மென்பொருட்கள் முதன் முறையாக, வெளியிடப்பட்ட அமெரிக்க காபிரைட் சட்டத்தின்படி, காப்புரிமையை பதிவு செய்வதற்கு, குறிப்பிடத்தக்க கணிசமான செய்முறை ஆதாயங்கள் உண்டு. மேலும் ஜி.பி.எல் பரந்த வினியோக உரிமைகளை வழங்கினாலும் கூட, காப்புரிமையினை அமல்படுத்துவது என்பது பொதுவாக விநியோகிப்போருக்கு சாத்தியமற்றதாக உள்ளது. காப்புரிமை உடையவரோ அல்லது காப்புரிமை அளிக்கப்பட்ட ஒருவரோதான் உரிமத்தினை அமல்படுத்த முடியும். பல்வேறு ஆசிரியர்களை காப்புரிமைக் கொண்ட படைப்பு கொண்டிருக்குமானால், உரிமையினை அமல்படுத்துவது அந்த படைப்பின் அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்பினால் மட்டுமே முடியும்.

நம்முடைய காப்புரிமைகள் அனைத்தும், பதிவு செய்வதற்கும் ஆவணப்படுத்தவும் அவசியமான அனைத்து தேவைகளையும் ஏற்றொழுகுவதை உறுதிபடுத்துவதற்காகவும், ஜி.பி.எல் ஐ திறம்பட அமல்படுத்துவதற்கும், கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, க மெ அ வில் ஏற்கப்பட்ட பணித்திட்டங்களின், ஒவ்வொரு நிரலை இயற்றியோரிடமிருந்து ஒரு காப்புரிமை அளிப்பையும், தேவைப்படும் சந்தர்ப்பங்களில், மென்பொருளின் நிரலாளர் வேலை பார்ப்பவர்களிடம் இருந்து வேலைக்கெடுத்ததற்காக-பணியாற்றுவது தொடர்பான உரிமைகளை துறப்பதற்கான சான்றிதழையும் கோருகிறது. இதன் மூலம் க மெ அ வின் பணித்திட்டங்களில் உள்ள அனைத்து நிரல்களும் கட்டற்றவை என உறுதிபடுத்த முடியும். இவ்வாறு உறுதிபடுத்துவதன் மூலம் அந்த மென்பொருளின் சுதந்தரங்களை நாம் மிகச் சிறப்பாக காப்பதும், அதன் மூலம் ஏனைய மென்பொருள் உருவாக்குவோர், முழுமையாக அம்மென்பொருள்களை நம்புவதும் சாத்தியப்படுகிறது.

ஏன் உரிமைகளை கட்டற்ற மென்பொருள அறக்கட்டளை கேட்கிறது